Search This Blog

Wednesday, June 16, 2021

ஒரு தாயின் ஆசை-கவிதை

இளஞ்சூட்டு வெந்நீரில் குளிப்பாட்டி,
 கருஞ்சாந்து பொட்டுவைத்து, ரெட்ட ஜடை பின்னி விட்டு,
நோட்டுப் புத்தகத்துடன் நாம் பள்ளிக்கு செல்வதை, பின்னால் நின்று ரசித்து மகிழும் தாய் .

தான் படிக்கவில்லை என்றாலும்
 தான் பெற்ற மகள் படித்து பட்டம் பெறவேண்டும் என்கிற தாயின் ஆசையை, மகள்கள் நாம் நிறைவேற்ற வேண்டாமா ?!!!

வகுப்பில் வம்பு பேசாமல் கும்மாளம் போடாமல் ஆசிரியர் சொல்கேட்டு அன்றாட பணி முடித்து வகுப்பில் மட்டுமல்ல, பள்ளியில் மட்டுமல்ல,
மாவட்டத்திலும் மாநிலத்திலும் "முதல் மாணவி" என்ற செய்தி செய்தித்தாள்களில் வரவேண்டும்.
 அதைக்கண்டு, நம் தாயும் தந்தையும் பூரித்து மகிழ வேண்டும் எனது அன்பு தோழிகளே!!!

செவிடனாய் இரு....தேவைப்படாத இடத்தில்.

*தன்னம்பிக்கை கதை👍*

*ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.*

*யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.*

*நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.*

*கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.*

*“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.*

*இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன.“உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது” என்று கத்தின.*

*ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.*

*கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.*

*“தற்கொலை முயற்சிடா தருதலை!”*

*எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.*

*எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.*

*அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.*

*“அவனுக்கு காது கேட்காது”.*

*நாமும் சில நேரங்களில் இப்படி தான் இருக்க வேண்டும்.*

*வெற்றியை எட்ட நினைப்பவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது.*

*நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான கருத்துக்கள் கூறப்பட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது.*

*முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை*

நாளும் வாசிப்போம் நல்லதொரு எண்ணம்